கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் இன்று நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதற்காக பல்வேறு வழிகளில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு.
இந்நிலையில் 'ஜகமே தந்திரம்' பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் கூறியுள்ளதாவது:
'ஜகமே தந்திரம்' மற்றும் சுருளி கதாபாத்திரத்தை வழங்கிய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி. உங்களுடன் பணிபுரிந்த மற்றும் மிகவும் கொடூரமான கேங்க்ஸ்டரான சுருளி கதாபாத்திரத்தில் நடித்த ஒவ்வொரு தருணத்தையும் ரசித்தேன். எல்லாப் புகழும் உங்களுக்கும் உங்கள் குழுவினருக்குமே சேரும்.
» ‘சூப்பர்டா தம்பி!’- தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள்
» நான் கேட்டதில் மிகச் சிறந்த கதை இது: மகளின் கதையைப் பகிர்ந்த பிருத்விராஜ் பெருமிதம்
இவ்வாறு தனுஷ் கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள கார்த்திக் சுப்புராஜ் ‘எனக்கும் அதே உணர்வுதான். அனைத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய விடாமுயற்சி இல்லையெனில் ‘ஜகமே தந்திரம்’ சாத்தியமாகியிருக்காது. உங்களைப் போன்ற ஓர் அற்புதமான நடிகர் மற்றும் மனிதருடன் பணிபுரிந்தது என்னுடைய அதிர்ஷ்டமாக உணர்கிறேன். சுருளிக்கு உயிர்கொடுத்த இந்த அனுபவத்தை என்றென்றும் போற்றிப் பாதுகாப்பேன்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago