அனில் ரவிப்புடி இயக்கத்தில் பாலகிருஷ்ணா

By செய்திப்பிரிவு

அனில் ரவிப்புடி இயக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக பாலகிருஷ்ணா நடிக்கவுள்ளார்.

ஜூன் 10-ம் தேதி தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்குத் திரையுலக பிரபலங்கள், வர்த்தக நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். அன்றைய தினம் அவருடைய அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ளார். தமன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இது பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகும் 107-வது படமாகும்.

தற்போது அவருடைய 108-வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள தனது ரசிகர்களுடன் உரையாடும்போது அனில் ரவிப்புடி இயக்கவுள்ள படத்தில் நடிக்கவிருப்பதை உறுதி செய்திருக்கிறார் பாலகிருஷ்ணா.

'ராஜா: தி கிரேட்', 'எஃப் 2', 'சரிலேரு நீக்கவெரு' ஆகிய படங்களை இயக்கியவர் அனில் ரவிப்புடி. தற்போது வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்துவரும் 'எஃப் 3' படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள படத்தை அனில் ரவிப்புடி இயக்குவார் எனத் தெரிகிறது.

தற்போது போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்