முதல்வர் பாதுகாப்பில் பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதற்கு தமிழக அரசுக்கு லாரன்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் செல்லும் பாதை உட்பட பந்தோபஸ்துக்காக சாலைகளில் பெண் போலீஸாரைப் பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான செய்திகள் ஜூன் 13-ம் தேதி வெளியாகின.
இந்த அறிவிப்புக்கு பெண் போலீஸார் மட்டுமன்றி பல்வேறு திரையுலக பிரபலங்களும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு நடிகர், இயக்குநர் லாரன்ஸுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக லாரன்ஸ் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
» முதல்வர் ஸ்டாலினுடன் விஜய் சேதுபதி சந்திப்பு: கரோனா நிவாரண நிதி வழங்கினார்
» ‘லகான்’ வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு: ஆமிர் கான் நெகிழ்ச்சி
"சாலையில் பாதுகாப்புப் பணிகளில் இருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்புப் பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காகவும், அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார். நானும் வருந்தியிருக்கிறேன். அந்த வகையில் இந்த ஆணையைக் கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி".
இவ்வாறு லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago