சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம்?

By செய்திப்பிரிவு

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

'டாக்டர்', 'அயலான்', 'டான்' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் 'டாக்டர்' மற்றும் 'அயலான்' ஆகிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 'டான்' படத்தின் சுமார் 40% படப்பிடிப்பு முடிவுற்றதாக கூறப்படுகிறது.

'டான்' படத்தைத் தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்காக 75 கோடி ரூபாய் சம்பளமாகப் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரே நிறுவனத்துக்கு 5 படங்கள் என்பதால், இந்தச் செய்தி திரையுலகில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சிவகார்த்திகேயன் தரப்பில் விசாரித்த போது, "இது உண்மையல்ல. வெறும் வதந்தி தான். இப்போதைக்குக் கதைகள் கேட்டு வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால், தனது அடுத்த படம் இது தான், இவர் தயாரிப்பாளர் உள்ளிட்டவை குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை" என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் சன் பிக்சர்ஸ் நிறுவனம் - சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் வெறும் வதந்தி தான் என்பது உறுதியாகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்