அட்லி தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் நாயகனாக ஜெய் நடிக்கவுள்ளார்.
அட்லி இயக்குநராக அறிமுகமான படம் 'ராஜா ராணி'. இதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக வலம் வருகிறார் அட்லி.
இயக்குநராக மட்டுமன்றித் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார் அட்லி. 'ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கி 'சங்கிலி புங்கிலி கதவ தொற', 'அந்தகாரம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார்.
தற்போது மீண்டும் தயாரிப்பில் இறங்கவுள்ளார் அட்லி. இந்தப் படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஜெய் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago