திருமணம் தொடர்பாக வெளியான செய்திகள் குறித்து நடிகை வனிதா விஜயகுமார் விளக்கமளித்துள்ளார்.
கடந்த ஆண்டு கடும் சர்ச்சைக்கு இடையே பீட்டர் பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார் வனிதா விஜயகுமார். தன்னை முறையாக விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்ததாக பீட்டர் பால் மீது அவரது முதல் மனைவி புகாரளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து திருமணமான சில தினங்களிலேயே வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர்.
இந்நிலையில் தற்போது வட இந்தியாவைச் சேர்ந்த பைலட் ஒருவரை வனிதா விஜயகுமார் திருமணம் செய்துகொண்டதாகவும் ஆனால் திருமணம் குறித்து அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை என்றும் சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதை சில ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டன.
இந்த சூழலில் தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்தி என்று வனிதா விஜயகுமார் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
உங்கள் அனைவருக்கும் ஒன்றை தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போதும் சிங்கிளாகவே இருக்கிறேன். அப்படியே இருக்க விரும்புறேன். எந்தவொரு வதந்தியையும் பரப்பவோ நம்பவோ வேண்டாம்.
இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
35 mins ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago