'96' படம் சிறப்பாக வந்ததிற்குக் காரணம் என்னவென்று வர்ஷா பொல்லாமா தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி, த்ரிஷா, கெளரி கிஷன், வர்ஷா பொல்லாமா நடிப்பில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘96’. ஒளிப்பதிவாளரான சி.பிரேம் குமார், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கோவிந்த் வசந்தா இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
பள்ளிக்கால காதலைப் பற்றிய இந்தப் படம், காதலர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.
எனவே, இந்தப் படம் பிற தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதியிடம் படிக்கும் மாணவராக வர்ஷா பொல்லாமால் நடித்திருந்தார்.
» தொடர்ந்து தள்ளிப்போன படப்பிடிப்பு: சல்மான் கான் படத்துக்கான அரங்கங்கள் கலைப்பு
» நல்லதுக்குதான் பேசினார்: தனுஷுடன் ஏற்பட்ட மோதல் குறித்து மனம் திறந்த சசிகாந்த்
இன்று (ஜூன் 3) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார் வர்ஷா பொல்லாமா. அதில் ரசிகர் ஒருவர் "'96' படம் பார்க்கும்போது இறுதி காட்சியில் நீங்கள் விஜய் சேதுபதியை மணப்பீர்கள் என்று நினைத்தேன், ஆனால்...." என்று கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக வர்ஷா பொல்லாமா "ஹா ஹா, நீங்கள் மட்டுமல்ல, பல பேர் என்னை இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.
ஆனால் 96 என்கிற படம் சிறப்பாக இருந்ததற்குக் காரணம் அந்தக் கதை முடிந்தவிதம் தான்" என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
51 mins ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago