திரைத்துறையில் ஒரு மைல்கல் 'இறைவி' என்று எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் புகழாரம் சூட்டியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, அஞ்சலி, கமாலினி முகர்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'இறைவி'.
2016-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாகப் பெரிதாக எடுபடவில்லை.
சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஞானவேல்ராஜா ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தார்கள். இன்றுடன் (ஜூன் 3) இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இதனை முன்னிட்டு 'இறைவி' படத்தின் இயக்குநர், நடிகர்கள், தங்களுடைய நினைவுகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
» மகேஷ் பாபு படம் தொடர்பான வதந்தி: உறுதி செய்த கதாசிரியர்
» தூய பேரன்பினைப் பொழிந்த ஓர் அண்ணனை இழந்துவிட்டேன்: ஜி.என்.ரங்கராஜன் மறைவுக்கு கமல் இரங்கல்
இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தப் படம் நமது திரைத்துறையில் ஒரு மைல்கல். நன்றி இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் அவர்களே. என்னைத் தேர்ந்தெடுத்து அதில் ஒரு பங்காற்ற வைத்தீர்கள். ரயில்வே நிலைய காட்சி படமாக்கிய தினத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை"
இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago