கோவிட்-19 கட்டுப்பாடு விதிகள் மீறல்: நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது

By செய்திப்பிரிவு

மும்பையில் கோவிட்-19 கட்டுப்பாடு விதிகளை மீறி காரில் உலா வந்ததால் நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது.

பாந்த்ரா பகுதியில் டைகர் ஷ்ராஃப் வசித்து வருகிறார். இவரும், நடிகை திஷா படானியும் காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டுகிறது. இருவரும் ஜிம்முக்கு சென்று விட்டு வரும் வழியில் பந்த்ஸ்டாண்ட், பாந்த்ரா பகுதியில் காலில் வலம் வந்துள்ளனர். இதைப் பார்த்த காவல்துறையினர் இவர்களது வண்டியை வழிமறித்தனர்.

இருவரும் அத்தியாவசியத் தேவை இன்றி அந்தப் பகுதியைச் சுற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. மகாராஷ்டிர மாநிலத்தில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி இப்படிக் காரணமின்றி வெளியே திரிபவர்கள் மீது வழக்கு பதியலாம்.

188 பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக மூத்த மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மும்பை காவல்துறை தரப்பு, 'வார்', 'மலங்', 'ஹீரோபந்தி' என இவர்கள் நடித்த படங்களின் தலைப்புகளைப் பயன்படுத்தி தங்களது ட்விட்டர் பக்கத்தில் சூசகமாகப் பதிவிட்டுள்ளது.

"தொற்றுக்கெதிரான போர் நடந்து கொண்டிருக்கும் போது, பாந்த்ரா வீதிகளில் சுற்றித் திரிந்ததால் இரண்டு நடிகர்கள் மீது காவல்துறையினரால் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கோவிட்-19ல் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு எதிராகத், தேவையில்லாத ஹீரோ வேலைகளைக் காட்ட வேண்டாம் என்று மும்பைவாசிகளைக் கேட்டுக் கொள்கிறோம்" என்று இந்த ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்