இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வாழ்க்கைக் கதையில் அவர் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடித்தால் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர்கள் இருவரிடையே ட்விட்டரில் கலகலப்பான உரையாடல் நடந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இணையத்தில் தீவிரமாக இயங்குபவர். இவரது யூடியூப் சேனல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ட்விட்டரில் பெரும்பாலும் நகைச்சுவை கலந்து அஸ்வின் பகிரும் ட்வீட்டுகளுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பக்கம் ஒன்றில், ரவிச்சந்திரன் அஸ்வின் பயோபிக்கில் நடிகர் அசோக் செல்வன் நடித்தால் எப்படி இருக்கும் என்று பயனர்களிடையே உரையாடல் தொடங்கியது.
இதை செவ்வாய்க்கிழமை அன்று கவனித்த நடிகர் அசோக் செல்வன், இந்த ட்வீட்டைப் பகிர்ந்து அஸ்வினைக் குறிப்பிட்டு, ''இதற்கு நான் பொறுப்பில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று சிரிக்கும் ஸ்மைலியோடு குறிப்பிட்டுள்ளார்.
» டப்பிங் பேசும்போது கிடைக்கும் திருப்தி: ஐஸ்வர்யா லட்சுமி கருத்து
» உங்களுடன் பணியாற்றக் காத்திருக்கிறேன்: இளையராஜாவுக்கு விஷால் பிறந்த நாள் வாழ்த்து
இதற்கு நகைச்சுவையாக பதிலளித்திருக்கும் அஸ்வின், "திரைக்கதையில் சிஎஸ்கே பற்றிய விஷயங்கள் பற்றி தெளிவுபடுத்திக் கொள்வோம். அதன்பின் இணைந்து பணியாற்றுவதைப் பற்றிப் பேசுவோம். எல்லாம் ஒப்புக்கொண்ட பிறகு அடுத்த கட்டத்துக்குச் செல்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
10 mins ago
சினிமா
21 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago