ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளைப் பிடித்தேன்; புகைப்பதை நிறுத்துங்கள்: எடிட்டர் சுரேஷ் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, எடிட்டர் சுரேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இன்று (மே 31) உலக புகையிலை ஒழிப்பு தினமாகும். இதனை முன்னிட்டு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும், சிகரெட் புகைப்பதை நிறுத்துமாறு தங்களுடைய சமூக வலைதளத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலிருந்து யுவன் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் இது தொடர்பாக ட்வீட் செய்துள்ளனர்.

இதில், முன்னணி எடிட்டரான சுரேஷின் ட்வீட் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஒரு நாளைக்கு 50-க்கும் மேல் சிகரெட் புகைத்து வந்தவர், தற்போது முற்றிலுமாக நிறுத்தியுள்ளார். இது தொடர்பான அவருடைய ட்வீட்டுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

சிகரெட் புகைப்பதை நிறுத்தியது தொடர்பாக எடிட்டர் சுரேஷ் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"ஒரு நாளைக்கு 50க்கும் அதிகமான சிகரெட்டுகளைப் பிடிப்பதிலிருந்து, தற்போது ஒரு சிகரெட்டைக் கூட பிடிக்காமல் இருப்பதுதான் எனக்கு மிகவும் கடினமாக இருந்த விஷயம். ஆனால், மிகவும் பலனளித்த விஷயமும் கூட. எனவே புகைப்பதை நிறுத்துங்கள். உங்கள் குடும்பத்தினர் உங்களை நேசிக்கின்றனர். அவர்களின் வலிமையாக, நம்பிக்கையாக இருங்கள். நிலைமை கைமீறிச் செல்வதற்குள் உடனடியாக நிறுத்துங்கள். என்னால் முடியுமென்றால் கண்டிப்பாக உங்களாலும் முடியும்”.

இவ்வாறு எடிட்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE