கரோனா 2-ம் அலை: பொதுமக்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை தொடர்பாகப் பொதுமக்களுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று (மே 30) தினசரி கரோனா தொற்றின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. ஆனாலும், முற்றிலுமாகக் கரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு.

மக்கள் மத்தியில் முகக்கவசம் அணிவது, கையை அடிக்கடி சுத்தம் செய்வது உள்ளிட்ட விஷயங்களைத் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் இணைந்துள்ளனர்.

தற்போது கரோனா விழிப்புணர்வு தொடர்பாக ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

"நம் அனைவருக்குமே தெரியும், நாம் இப்போது கரோனா 2-வது அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட, இரண்டாவது அலையில் நிறையப் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ஆஸ்துமா, இதயப் பிரச்சினை இருப்பவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.

தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். முக்கியமான விஷயத்துக்காக வெளியே சென்றால் கூட இரட்டை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.

குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்".

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்