ஓடிடியில் வெளியாகிறதா 'எஃப்.ஐ.ஆர்'?

By செய்திப்பிரிவு

விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்துள்ள 'எஃப்.ஐ.ஆர்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து, நடித்து வரும் படம் 'எஃப்.ஐ.ஆர்'. இந்தப் படத்தில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர். ஜனவரி 31-ம் தேதியுடன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்தது.

இந்நிலையில், இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தது படக்குழு. இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளதாகத் தெரிகிறது. இதன் டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தால் படக்குழுவினர் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் அமைதி காத்து வருகின்றனர்.

இதனிடையே, 'எஃப்.ஐ.ஆர்' படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடப் பேச்சுவார்த்தை நடந்தது. இதனை ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் கைப்பற்றிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

'எஃப்.ஐ.ஆர்' படத்தைத் தொடர்ந்து, 'மோகன்தாஸ்' படத்தைத் தயாரித்து, நடிக்கவுள்ளார் விஷ்ணு விஷால்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்