'மரகத நாணயம் 2' படம் உருவாக இருப்பதை உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர் டில்லி பாபு.
ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மரகத நாணயம்'. 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை டில்லி பாபு தயாரித்திருந்தார்.
’மரகத நாணயம்’ படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.கே.சரவணன் இன்னும் எந்தவொரு படத்தையும் இயக்கவில்லை. பல்வேறு முன்னணி நாயகர்களிடம் கதைகள் கூறினாலும், அவை பேச்சுவார்த்தை அளவிலேயே இருந்து வருகின்றன.
இந்நிலையில், ட்விட்டரில் பிரபலமாகி வரும் ஸ்பேசஸ் பகுதியில் தயாரிப்பாளர் டில்லி பாபு கலந்துகொண்டார். அப்போது 'மரகத நாணயம்' படம் குறித்துப் பேசும்போது, அந்தப் படத்தின் 2-ம் பாகம் பேச்சுவார்த்தையில் இருப்பதை உறுதிப்படுத்தினார். அதற்கான கதையில் ஏ.ஆர்.கே சரவணன் பணிபுரிந்து வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் விரைவில் 'மரகத நாணயம் 2' உருவாகும் எனத் தெரிகிறது. அதே படக்குழுவினரா அல்லது மாற்றம் இருக்குமா என்பது விரைவில் தெரியவரும்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago