'லிஃப்ட்' வெளியீடு: ரவீந்தர் சந்திரசேகரன் விளக்கம்

By செய்திப்பிரிவு

'லிஃப்ட்' வெளியீடு குறித்து ரவீந்தர் சந்திரசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு கவின் நாயகனாக நடித்துள்ள படம் 'லிஃப்ட்'. வினித் வரபிரசாத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கவினுக்கு நாயகியாக அம்ரிதா ஐயர் நடித்துள்ளார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.

இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது கரோனா 2-வது அலையின் தீவிரத்தல் இன்னும் வெளியிட முடியாமல் உள்ளது. இதனிடையே, இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், 'லிஃப்ட்' படத்தின் வெளியீடு குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரவீந்திரன் சந்திரசேகர் கலந்துரையாடல் ஒன்றில் பேசியுள்ளார்.

அதில் 'லிஃப்ட்' படம் அனைத்து பணிகளும் முடிவடைந்து தயாராகவுள்ளது. தமிழ் சினிமாவில் ஒரு 'ஈவில் டெட்' பாணியில் இருக்கும்.

ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, திரையிரங்குகளில் வெளியிடக் கூடிய சூழலே இல்லை என்றால் மட்டும் டிஜிட்டலில் வெளியாகும். ஆனால், 'லிஃப்ட்' திரையரங்கிற்கான படம் தான்” என்று தெரிவித்துள்ளார்.

'லிஃப்ட்' படத்துக்கு ஒளிப்பதிவாளராக யுவா, இசையமைப்பாளராக மைக்கேல் பிரிட்டோ, சண்டைக்காட்சிகள் இயக்குநராக ஸ்டன்னர் சாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE