கோவிட் தொற்றை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது: ஜூனியர் என்.டி.ஆர்.

By செய்திப்பிரிவு

கோவிட் தொற்றை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்றின் 2-வது அலையில் பல்வேறு முன்னணி நடிகர், நடிகைகள் பாதிக்கப்பட்டனர். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்கள். இதில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டது.

மே 10-ம் தேதி ஜூனியர் என்.டி.ஆருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வந்தார். அவர் பூரண நலம்பெற பல்வேறு நடிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில் இன்று (மே 25) ஜூனியர் என்.டி.ஆர் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இதனைத் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஜூனியர் என்.டி.ஆர். தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"எனக்கு கோவிட்-19 தொற்று நீங்கிவிட்டது என்பதைச் சொல்வதில் மகிழ்ச்சி. வாழ்த்திய அத்தனை பேருக்கும் நன்றி. கிம்ஸ் மருத்துவமனை, டெனெட் டயக்னாஸ்டிக்ஸைச் சேர்ந்த, எனது மருத்துவர்கள் டாக்டர் பிரவீன் குல்கர்னி, எனது உறவினர் டாக்டர் வீரு ஆகியோருக்கு நான் இந்த தருணத்தில் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் காட்டிய அற்புதமான அக்கறை எனக்கு அதிகம் உதவியது.

கோவிட்-19 தொற்றை நாம் லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அதே நேரம், நல்ல சிகிச்சை மற்றும் நேர்மறையான மன ஓட்டம் இருந்தால் அதை வெல்லலாம். இந்தப் போராட்டத்தில் உங்கள் மனவலிமைதான் உங்களின் மிகப்பெரிய ஆயுதம். வலிமையாக இருங்கள், பதற்றம் வேண்டாம். முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே இருங்கள்".

இவ்வாறு ஜூனியர் என்.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

20 mins ago

சினிமா

30 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்