ஓடிடியில் வெளியாகிறதா ‘மைதான்’? - தயாரிப்பாளர்கள் விளக்கம்

By செய்திப்பிரிவு

அமித் ஷர்மா இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மைதான்'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்துக்காக மும்பையில் பிரம்மாண்ட கால்பந்தாட்ட மைதான அரங்குகளை அமைத்து படமாக்கி வந்தது படக்குழு. கடந்த ஏற்பட்ட கரோனா பாதிப்பினாலும், மழை எச்சரிக்கையாலும் இந்த அரங்குகள் அகற்றப்பட்டு படப்பிடிப்பும் தற்காலிமாக நிறுத்தப்பட்டது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மீண்டும் அரங்குகளை அமைத்து படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் 'மைதான்' படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் இதை உண்மை என்று நினைத்து பகிர்ந்து வந்தனர்.

இந்த தகவலுக்கு படத்தில் தயாரிப்பாளர்களான போனி கபூர், ஆகாஷ் சாவ்லா, அருணவா ஜாய் செங்குப்தா மூவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மைதான்’ படத்தை ஓடிடியில் நேரடியாக வெளியிட எந்தவொரு நிறுவனத்துடனும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தற்போது படக்குழுவினர் அனைவரது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றியும் ’மைதான்’ படத்தை விரைவில் முடிப்பது மட்டுமே எங்களுடையே ஒரு நோக்கம். ‘மைதான்’ படம் குறித்து வரும் எந்தவொரு தகவலையும் நம்பவேண்டாம் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE