‘ஃப்ரண்ட்ஸ் ரீயூனியன்’ ட்ரெய்லர் ஏற்படுத்திய சர்ச்சை

By செய்திப்பிரிவு

1994ஆம் ஆண்டு வெளியாகி உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘ஃப்ரண்ட்ஸ்’. இன்று வரை இத்தொடருக்கு உலகமெங்கும் பெரும் ரசிகர் கூட்டம் உண்டு. 94 முதல் 2004 வரை ஒளிபரப்பான இத்தொடரில் மொத்தம் 236 எப்சோட்கள் அடக்கம். இத்தொடரில் நடித்த ஜெனிஃபர் அனிஸ்டன் உள்ளிட்ட அனைவருமே ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களாக வலம் வருகின்றனர்.

தற்போது இத்தொடர் குறித்த நினைவுகளை அதில் நடித்த நடிகர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சி விரைவில் வெளியாகவுள்ளது . ‘ஃப்ரண்ட்ஸ் ரீயூனியன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

இந்நிலையில் இந்த ட்ரெய்லர் வெளியான சில மணி நேரங்களின் ‘ஃப்ரண்ட்ஸ்’ ரசிகர்களின் கோபத்துக்கு உள்ளானது. இந்த நிகழ்ச்சியை ‘தி லேட் லேட் ஷோ’ மூலம் பிரபலமான ஜேம்ஸ் கோர்டென் தொகுத்து வழங்குகிறார். ‘ஃப்ரண்ட்ஸ்’ தொடரின் ரசிகர்களாக ப்ராட் பிட், பால் ரட், ப்ரூஸ் வில்லிஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இருக்கும்போது இத்தொடருக்கு சம்பந்தமே இல்லாத கேம்ஸ் கோர்டெனை தொகுப்பாளராக ஒப்பந்தம் செய்தது ஏன் என்று ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE