ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கிய ஹேமமாலினி 

By செய்திப்பிரிவு

தனது தொகுதியான மதுரா மாவட்டத்துக்கு ஏழு ஆக்சிஜன் செறிவூட்டிகளை நடிகையும் எம்.பி.யுமான ஹேமமாலினி வழங்கியுள்ளார்.

கரோனா 2-வது அலை இந்தியாவைக் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,76,070 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,874 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டோருக்கு நேரடியாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் ஏராளமான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினி தனது மக்களவைத் தொகுதியான மதுராவில் ஏழு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஹேமமாலினி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

''மதுரா குடியிருப்புவாசிகளுக்காக ஏழு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியதை ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். மதுரா மாவட்டத்தில் உள்ள ப்ராஜ் கிராம மக்களுக்காக விரைவில் இன்னும் அதிக ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கவுள்ளேன். அதேபோல 60 ஆக்சிஜன் படுக்கைகளும் அங்கு நிறுவப்பட உள்ளன''.

இவ்வாறு ஹேமமாலினி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE