'இந்தியன் 2' விவகாரம் எதிரொலி: இயக்குநர் ஷங்கரிடம் உத்தரவாதம் கேட்ட ராம் சரண்

By செய்திப்பிரிவு

'இந்தியன் 2' படத்தின் பிரச்சினை பெரிதானதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தன்னை வைத்து இயக்கவிருந்த தெலுங்கு படம் குறித்து நடிகர் ராம் சரண் தேஜா உத்தரவாதம் கோரியுள்ளார்.

நடிகர் கமல் நடிக்கும் 'இந்தியன் - 2' திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, படத் தயாரிப்பு நிறுவனம் லைகா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கில், இயக்குநர் ஷங்கர் தரப்பில் இன்று பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், பல உண்மைத் தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்தார் இயக்குநர் ஷங்கர்.

மேலும் முதலில் இந்தப் படத்தை தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்க முன்வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தைத் தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்ததாகவும் கூறினார்.

மேலும் படத் தயாரிப்புப் பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகக் கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் ஷங்கர் கூறியிருந்தார்.

ஜூன் 4-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் ஷங்கர் தில் ராஜு தயாரிப்பில் ராம் சரண் தேஜா நாயகனாக நடிக்கும் பன்மொழித் திரைப்படத்தின் வேலைகள் குறித்தும், இந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகும் 'அந்நியன்' திரைப்படத்தின் ரீமேக் வேலைகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

ஜூன் மாதம் ராம் சரண் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் 'இந்தியன் 2' சர்ச்சையாலும், கோவிட் நெருக்கடி நிலையாலும் அது தள்ளிப்போகிறது.

எனவே அமெரிக்காவில் இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜுவை ராம் சரண் தொடர்பு கொண்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஷங்கருடனும் அவ்வபோதும் பேசி வரும் ராம் சரண், தனது படத்தை முடித்து விட்டே ஷங்கர் அடுத்த படத்துக்குச் செல்ல வேண்டுமென்று உத்தரவாதம் கோரியதாகவும் தெரிகிறது.

ஷங்கர் இதற்கு சம்மதித்திருந்தாலும் ஜூன் 4 விசாரணையில் நீதிமன்ற தீர்ப்புக்குப் பின் இது குறித்த தெளிவு கிடைக்கும் என்று இரண்டு தரப்புகளும் காத்திருக்கின்றன.
.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்