மீண்டும் ஓடிடியில் வித்யா பாலன் படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

By ஏஎன்ஐ

வித்யா பாலன் நடிப்பில் உருவான 'ஷெர்னி' திரைப்படம் ஜூன் மாதம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி சீரிஸ் தயாரிப்பில், 'நியூட்டன்' திரைப்படத்தை இயக்கிய அமித் மசுர்கார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். வித்யா பாலன், ஷரத் சக்ஸேனா, முகுல் சட்டா, விஜய் ராஸ் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

மனிதர்களால் வனங்களுக்கும் வன விலங்குகளுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதைச் சரிசெய்ய நினைக்கும் நேர்மையான வன அதிகாரி ஒருவரைப் பற்றியும் சொல்லும் படம் இது. வித்யா பாலன் வன அதிகாரியாக நடித்துள்ளார். பிப்ரவரி மாதம்தான் இந்தப் படத்தைப் பற்றிய அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யா பாலன் பகிர்ந்திருந்தார்.

தற்போது வெளியீடு குறித்து அமேசான் ப்ரைம் வீடியோ ட்விட்டர் பக்கத்தில், "இவள் தன் தடத்தைப் பதிக்கத் தயாராக இருக்கிறாள். ஷெர்னியை ஜூன் மாதம் ப்ரைமில் சந்தியுங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

படத்தின் போஸ்டரும் பகிரப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வனத்துக்கு நடுவில், துப்பாக்கியின் குறியில் வித்யா பாலன் சிக்கியிருப்பது போல சித்தரிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக வித்யா பாலன் நடிப்பில் உருவான 'ஷகுந்தலா தேவி' திரைப்படமும், கரோனா நெருக்கடி, ஊரடங்கு காரணமாக நேரடியாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியானது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்