‘புதுப்பேட்டை’, ‘அசுரன்’ படங்களின் மூலம் பிரபலமான நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார்.
2006ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‘புதுப்பேட்டை’. இப்படத்தில் தனுஷின் நண்பனாக ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் நிதிஷ் வீரா. அப்படத்தில் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து விஷ்ணு விஷால் நடித்த ‘வெண்ணிலா கபடி குழு’, ரஜினி நடித்த ‘காலா’ ஆகிய படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார். இறுதியாக வெற்றிமாறன் நடிப்பில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்தக் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதிஷ் வீராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சென்னையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில் இன்று (மே 17) அதிகாலை நிதிஷ் வீரா உயிரிழந்தார்.
» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கரோனாவால் மரணம்
» கரோனா நிவாரண நிதி: ஷங்கர், வெற்றிமாறன், ஜெயம் ரவி தலா ரூ.10 லட்சம் வழங்கினர்
நிதிஷ் வீராவின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago