நகைச்சுவை நடிகர் மாறன் கரோனா தொற்றால் மரணம்

By செய்திப்பிரிவு

நகைச்சுவை நடிகர் மாறன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 48.

விஜய் நடிப்பில் வெளியான 'கில்லி', 'குருவி' உள்ளிட்ட படங்களில் நடித்துவர் நடிகர் மாறன். இது தவிர்த்து 'டிஷ்யூம்', 'பாஸ் என்ற பாஸ்கரன்', 'வேட்டைக்காரன்', 'பட்டாஸ்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தற்போது பா.இரஞ்சித் இயக்கி முடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடித்திருந்தார் மாறன்.

செங்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் வசித்து வந்த இவருக்குக் கடந்த சில நாடகளுக்கு முன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை மாறன் உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் இன்று நடிகர் மாறன் உயிரிழந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்