நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க இயக்குநர் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகத் தெரிகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். கரோனா 2-வது அலையின் தீவிரம் குறைந்தவுடன், சென்னையில் 2-ம் கட்டப் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
‘தளபதி 65’ என்று அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த தகவல்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது, சமீபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது படத்தின் வில்லனாக இயக்குநர் செல்வராகவன் நடிக்கவிருப்பதாக ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது.
» சந்தோஷமா போய்ட்டு வாங்க: தாத்தாவின் மறைவுக்கு ப்ரியா பவானி சங்கர் நெகிழ்ச்சிப் பகிர்வு
» தணிக்கை முடிந்து ஓடிடியில் வெளியாகிறதா மஹா? இயக்குநர் விளக்கம்
இது குறித்து சன் பிக்சர்ஸ் தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லையென்றாலும் செல்வராகவனிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது 'சாணி காயிதம்' திரைப்படத்தில் முதல் முறையாக நடித்து வருகிறார். எனவே தளபதி 65 படத்தில் அவர் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவே தெரிகிறது. .
முக்கிய செய்திகள்
சினிமா
15 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago