மஹா திரைப்படம் தணிக்கை முடிந்து ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது என்கிற செய்திக்கு மறுப்பு தெரிவித்து படத்தின் இயக்குநர் ஜமீல் ட்வீட் செய்துள்ளார்.
ஹன்சிகா நடிப்பில் உருவாகி வரும் 50-வது படம் 'மஹா'. ஜமீல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை மதியழகன் தயாரித்து வருகிறார். சிம்பு, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட சிலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒளிப்பதிவாளராக லக்ஷ்மன், எடிட்டராக ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
இந்தப் படத்தில் சிலம்பரசன் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்களிடையேயும் இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது. ஆனால் படம் ஆரம்பித்து பல வருடங்கள் கழித்தும் படத்தைப் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் தெரியவில்லை என்பதில் ரசிகர்கள் சிலர் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் படத்தின் வேலைகள் முடிந்துவிட்டதாகவும், தணிக்கைக்கு அனுப்பியிருப்பதாகவும், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்றும் சிலர் ட்விட்டரில் பகிர்ந்து வந்தனர்.
» சிம்புவுடன் ‘மாநாடு’ படம் பார்த்த தயாரிப்பாளர்: படக்குழுவினருக்கு நன்றி
» அவசியம் என்றால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் - மகேஷ் பாபு வேண்டுகோள்
இது குறித்து தெளிவுபடுத்தியிருக்கும் படத்தின் இயக்குநர் யுஆர் ஜமீல், "இது பொய்யான செய்தி. சிலம்பரசன் அவர்களின் ரசிகர்கள் எப்படி உணர்வார்கள் என்பது எனக்கு நன்றாகப் புரிகிறது. மஹா ஆரம்பித்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. எனக்குத் தெரியும். ஆனால் எனது படத்தைப் பற்றிய சரியான தகவல் தெரிந்து கொள்ள இன்னும் சில நாட்கள் காத்திருங்கள். என் படத்தின் மீது எஸ்டிஆர் ரசிகர்கள் காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் நான் என்றும் நன்றியுடன் இருப்பேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago