சிம்புவுடன் ‘மாநாடு’ படம் பார்த்த தயாரிப்பாளர்: படக்குழுவினருக்கு நன்றி

By செய்திப்பிரிவு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன், இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இன்னும் ஓரிரு நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருக்கிறது. இதனை எங்கு படமாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது படக்குழு. இதுவரை முடிக்கப்பட்ட காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சிம்பு இருவரும் ‘மாநாடு’ படத்தை பார்த்துள்ளனர். இது குறித்து சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது:

நானும் சிலம்பரசனும் இணைந்து எங்களுடைய ‘மாநாடு’ படத்தை பார்த்தோம். வெங்கட் பிரபுவின் அற்புதமான பணியால் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். ஒரு த்ரில்லர் மாஸ் பொழுதுபோக்கு திரைப்படத்துடன் ‘மங்காத்தா’ இயக்கி இயக்குநர் திரும்ப வந்துள்ளார். அற்புதமான நடிப்பை வழங்கியுள்ள இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நன்றி.

கல்யாணி ப்ரியதர்ஷன் தனது அழகான இருப்பால் நம் இதயங்களை கவர்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

சினிமா

25 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்