முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் விஷால்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினை நடிகர் விஷால் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்குத் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நடிகர் விஷால் ஊடகங்களுக்கன அறிக்கையில், " முதல்வரை சந்தித்து வாழ்த்து சொன்னேன். அத்துடன் நடிகர் சங்கத்தின் இன்றைய நிலைமையும் எடுத்து கூறினேன். இதனால் எத்தனை கலைஞர்கள் பென்ஷன் கிடைக்காமல் , மருந்து வாங்க கூட முடியாமல் கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பற்றியும் விளக்கினேன்.

இன்றைய சூழலில் கொரோனாவில் இருந்து முதலில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அனைத்து கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகு , கண்டிப்பாக அதற்கான ஆவணத்தை கண்டிப்பாக செய்து தருகிறேன் என்று உறுதி அளித்தார்.

அத்துடன் கவனமாக இருக்கவும் என்னை அறிவுறுத்தினார். அத்தோடு முதன் முதலாக போட்டியிட்டு வெற்றி பெற்று MLA ஆன திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக் கூறினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்