கரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அடித்தட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது அறக்கட்டளையின் மூலம் உதவி வருகிறார்.
நேற்று (மே. 07) யோலோ என்ற ஒரு அறக்கட்டளையை ஜாக்குலின் தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் மூலம் ஏழை மக்களுக்கு நேற்று மும்பையில் உணவு வழங்கப்பட்டது.
இது குறித்து ஜாக்குலின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
» வாழ்வாதாரத்தை இழந்த சினிமா பணியாளர்கள்: புதிய திட்டத்தை அறிவித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ்
» கரோனா காலத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிவகுமார் வேண்டுகோள்
பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி தொடங்குகிறது என்று அன்னை தெரசா கூறினார். முன்னாள் காவல் ஆணையர் சிவானந்தன் நடத்தி வரும் ரொட்டி பேங்க் உடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இன்று வரை கோடிக்கணக்கான மக்களுக்கு ரொட்டி பேங்க் உணவு தயாரித்து வழங்கி வருகிறது. இந்த கடினமான காலத்தில் அவர்களுக்கு உதவி செய்வதை நான் கவுரமாக கருதுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago