உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் 'ஆர்டிகிள் 15'. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் தயாராகி வருகிறது.
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். முதற்கட்டப் படப்பிடிப்பை பொள்ளாச்சியில் முடித்துவிட்டுத் திரும்பியுள்ளது படக்குழு.
விரைவில் சென்னையில் அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அரசியல் பணிகள் இருப்பதால் அது அனைத்தையும் முடித்துவிட்டு ரம்ஜானுக்குப் பிறகு மீண்டும் தேதிகள் கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
» சினிமாவைப் பற்றி அனைத்தும் தெரிந்தவர் சிலம்பரசன்- ‘மாநாடு’ அனுபவங்களைப் பகிரும் ஒய்.ஜி.மகேந்திரன்
தற்போது இதில் உதயநிதியின் மனைவி கதாபாத்திரத்தில் தான்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்திப் படத்தில் இஷா தல்வார் நடித்த கதாபாத்திரம் இதுவாகும். மேலும், ஆரி, சிவாங்கி உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
'ஆர்டிகிள் 15' தமிழ் ரீமேக்கை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago