அம்மு அபிராமிக்கு கரோனா தொற்று உறுதி

By செய்திப்பிரிவு

நடிகை அம்மு அபிராமிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை மிகவும் தீவிரமடைந்துள்ளது. இதனால் மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

இதனிடையே பல்வேறு திரையுலக பிரபலங்களுக்கும் கரோனா தொற்று உறுதியாகி வருகிறது. தற்போது 'அசுரன்' படத்தில் நடித்த அம்மு அபிராமிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் அம்மு அபிராமி கூறியிருப்பதாவது:

"ஜுரம் அறிகுறி தெரிந்தபிறகு செய்த பரிசோதனையில் எனக்கு கோவிட்-19 இருப்பது உறுதியாகியுள்ளது. மருத்துவரின் அறிவுரையின் பேரில் நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். தேவைப்படும் மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பைவிட வலிமையாக மீண்டு வருவேன். பாதுகாப்பாக இருங்கள். அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்".

இவ்வாறு அம்மு அபிராமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

11 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்