தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின்: திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஒருசில தொகுதிகளுக்கு மட்டுமே முடிவுகள் வெளியாகவுள்ளன. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதில் திரையுலக பிரபலங்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துகளின் தொகுப்பு:

பா.இரஞ்சித்: தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்! சாதி மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நீதியை நிலை நாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் !

சதீஷ்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

சூரி: 40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராகப் பதவி ஏற்கும் கழக தலைவர் முக ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

ஜி.வி.பிரகாஷ்: திமுக தலைவராகத் தேர்தலைச் சந்தித்து தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கும் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் ... வாழ்த்துக்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அன்பில் மகேஷ்

வரலட்சுமி: முக ஸ்டாலின் அவர்கள், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஒட்டுமொத்த திமுகவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆட்சியை எதிர்நோக்கியுள்ளேன். எங்களை உயர்த்துங்கள். உங்களது இந்தப் பயணம் தமிழகத்துக்குச் சிறப்பானதாக இருக்கட்டும்.

சாம் சி.எஸ்: முக ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சகோதரர் உதயநிதி அவர்களே, மிகுந்த மகிழ்ச்சி...!

ஜெயம் ரவி: நமது புதிய முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் உதயநிதி அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த கடினமான காலகட்டத்தில் உங்கள் ஆட்சியை அதிக எதிர்பார்ப்புகளோடு எதிர்நோக்கியிருக்கிறோம்.

ஹாரிஸ் ஜெயராஜ்: ஸ்டாலின் அவர்களுக்கும், உதயநிதி அவர்களுக்கும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

விஷ்ணு விஷால்: முக ஸ்டாலினை சுற்றி அனைவரும் எவ்வளவு வருடங்கள், எவ்வளவுக் கடினமாக உழைத்தார்கள் என்பதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு உரிய வெற்றி தான். முக ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகம் மக்களுக்கான, முற்போக்குக் கொள்கைகளைப் பார்க்கக் காத்திருக்கிறோம். உங்களது அட்டகாசமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் முக ஸ்டாலின் அவர்களே, உங்கள் தலைமையில் தமிழகம் செழிக்கும், சரியான திசையில் முன்னேறும் என்று நான் நம்பிக்கையாக இருக்கிறேன்.

சி.வி.குமார்: எவ்வளவு போராட்டங்கள்? தடைகள்? இந்த முக்கியச் சூழலில் திமுகவை வெற்றிக்கு வழிநடத்தினார். ஒரு தலைவனாகத் தன்னை நிரூபித்திருக்கிறார். தமிழகத்தின் முன்னேற்றத்துக்குத் தமிழக மக்கள் முக ஸ்டாலின் அவர்களை நம்புகிறார்கள்.

சிபிராஜ்: நமது புதிய முதல்வர் முக ஸ்டாலினை கொண்டாட வேண்டிய, வரவேற்க வேண்டிய நேரம் இது. மனமார்ந்த வாழ்த்துக்கள் உதயநிதி அவர்களே. புதிய அரசுக்கு என் வாழ்த்துக்கள். உரித்தான வெற்றி.

பிரகாஷ்ராஜ்: உயரிய வெற்றி. வாழ்த்துக்கள் முக ஸ்டாலின். மாற்றத்துக்கான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர். மாற்றத்தைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன், விரும்புகிறேன். வாழ்த்துக்கள்.

விக்ரம் பிரபு: முக ஸ்டாலினுக்கும் , சகோதரர் உதயநிதிக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நிர்வாகத்தில் சிறந்த ஆண்டுகள் வரும் என்று விரும்புகிறேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE