ஆஸ்கர் விருது வென்ற நடிகை ஒலிம்பியா மறைவு

ஆஸ்கர் விருது வென்ற நடிகை ஒலிம்பியா டுகாகிஸ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 89.

ஒலிம்பியா டுகாகிஸ் மேடை நாடகங்களில் தன் வாழ்க்கையைத் தொடங்கி, 60க்கும் அதிகமான திரைப்படங்களிலும், 50க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தவர். 1987ஆம் ஆண்டு வெளியான ‘மூன்ஸ்ட்ரக்’ படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் உள்ளிட்ட விருதுகளை வென்றார்.

இது தவிர 1992ஆம் ஆண்டு வெளியான ‘சினடாரா’ படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். 2020ஆம் ஆண்டு இவரைப் பற்றி ‘ஒலிம்பியா’ என்ற ஆவணப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த ஒலிம்பியா நேற்று (மே. 01) நியூயார்க் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். ஒலிம்பியாவின் மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE