‘எப்போதும் நம் இதயத்தில் இருப்பார்' - கே.வி.ஆனந்த் மறைவுக்கு மோகன்லால் இரங்கல்

By செய்திப்பிரிவு

இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் மோகன்லால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிசக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

அவர் நம் பார்வையிலிருந்து மறைந்துவிட்டார். ஆனால் எப்போதும் நம் இதயத்தில் இருப்பார். கே.வி.ஆனந்த் சார் நீங்கள் என்றென்றும் நினைவுகூரப்படுவீர்கள். அவரது ஆன்மாவுக்கு எனது பிரார்த்தனைகள்.

இவ்வாறு மோகன்லால் கூறியுள்ளார்.

மோகன்லால் நடித்த ‘தேன்மாவின் கொம்பத்’ படத்தில் தான் கே.வி.ஆனந்த் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய ‘காப்பான்’ படத்தில் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE