சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்திருக்கும் திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
சுசீந்திரன் இயக்க ஜெய் நாயகனாக நடித்திருக்கும் ஒரு படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்துள்ளார். மேலும், ஹரிஷ் உத்தமன், ஸ்மிருதி வெங்கட், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு சுசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' வெளியானதால் அதன் பிறகே பெயரிடப்படாத இந்தப் படத்தை வெளியிடலாம் என்று படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், பல மாத ஊரடங்குக்குப் பின் திரையரங்குகள் திறக்கப்பட்டு பல்வேறு திரைப்படங்கள் வெளியாகத் தயாராக இருந்ததால் இந்தப் படத்தை அப்போது வெளியிடவில்லை.
தற்போது கரோனா நெருக்கடியும் நிலவுவதால் இன்னும் சில மாதங்களுக்கு படத்தைத் திரையரங்குகளில் வெளியிட முடியாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, தற்போது நேரடியாக ஜீ 5 தளத்தில் படத்தை வெளியிடப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் படத்தை ஜீ5 வாங்கியுள்ளது.
விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பும், விளம்பரமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய் நடிக்க, 'ஷிவா ஷிவா' என்கிற திரைப்படத்தையும் சுசீந்திரன் இயக்கி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஜெய்யே இசையமைத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago