இயக்குநர் ராம் நிவின் பாலி நாயகனாக நடிக்கும் திரைப்படத்தை இயக்குவதாகவும், தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆழமான படைப்புகளால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்றவர் இயக்குநர் ராம். ’கற்றது தமிழ்’, ’தரமணி’, ’தங்க மீன்கள்’, ’பேரன்பு’ உள்ளிட்ட இவரது படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றதோடு பல விருதுகளையும் வென்றுள்ளன. தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் ராம், கடைசியாக மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
நிவின் பாலி தமிழகத்திலும், கேரளாவிலும் பிரபலமாக இருக்கும் நாயகன். ’நேரம்’, ’ரிச்சி’ என இவர் நேரடியாக தமிழில் நடித்தது இரண்டே படங்கள் தான் என்றாலும் இவரது மலையாளப் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டம் தமிழகத்திலும் உண்டு.
இதை மனதில் வைத்து, நிவின் பாலி நாயகனாக நடிக்க தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தை ராம் இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ராம் இயக்கத்தில் உருவான ’பேரன்பு’ திரைப்படம் மலையாளத்திலும் வெளியானது நினைவுகூரத்தக்கது.
» 'புஷ்பா' அப்டேட்: அல்லு அர்ஜுனுக்குத் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்?
» என் பதிவுகள் பிடிக்கவில்லையா? தொடராதீர்கள்: ரசிகருக்கு யுவன் பளிச் பதில்
முக்கிய செய்திகள்
சினிமா
12 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
35 mins ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago