'புஷ்பா' திரைப்படத்தில் அல்லு அர்ஜுனின் தங்கை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தி பொய்யானது எனத் தெரியவந்துள்ளது.
'அலா வைகுந்தபுரம்லோ' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு 'புஷ்பா' படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். 'ரங்கஸ்தலம்' படத்துக்குப் பிறகு சுகுமார் இயக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. செம்மரக் கடத்தல் விவகாரம் தொடர்பான கதை என்று கூறப்படும் 'புஷ்பா' திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு வனப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். தெலுங்கில் அவர் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இது.
அல்லு அர்ஜுனின் தங்கை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாகவும், கதையில் நாயகியை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரமாக இது இருக்கும் என்றும் திடீரென செய்திகள் உலவின. ஆனால், தான் எந்தக் கதாபாத்திரத்திலும் 'புஷ்பா'வில் நடிக்கவில்லை என்று ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இதன் பின் 'கனா' தமிழ்ப் படத்திலும், அதன் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். ஆனால், தெலுங்கு ரீமேக் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தற்போது 'தி கிரேட் இண்டியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரதான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago