ரம்ஜான் வெளியீடாக 'லாபம்': விஜய் சேதுபதி ட்வீட்

By செய்திப்பிரிவு

'லாபம்' திரைப்படம் ரம்ஜான் தினத்தன்று (மே 14) வெளியாகும் என்று படத்தின் நாயகன் விஜய் சேதுபதி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லாபம்'. இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை 7சி எண்டர்டையின்மெண்ட் மற்றும் விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வருகிறது.

'லாபம்' படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எஸ்.பி.ஜனநாதனுக்கு உடல்நிலை மோசமடைந்தது. அதன் பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு திரையுலகில் பெரும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.

அந்தச் சூழலில் 'லாபம்' படத்தின் நிலை என்ன, எப்போது வெளியீடு உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. அவற்றைத் தெளிவுபடுத்தும் வகையில் 'லாபம்' படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான 7சி எண்டர்டையின்மெண்ட், ஏற்கெனவே திட்டமிட்டபடி வருகிற ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் படம் வெளியாகும் என்று அறிக்கை வெளியிட்டது.

வெள்ளிக்கிழமையன்று படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. இந்தப் பாடலின் யூடியூப் இணைப்பைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விஜய் சேதுபதி, படம் ரம்ஜான் தினமான மே 14 அன்று வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடி ஓடிடி வெளியீடாக இருக்கலாம் என்று கூறப்படும் நேரத்தில் 'லாபம்' நேரடியாகத் திரையரங்குகளில் வெளியாகும் என்கிற அறிவிப்பு திரையரங்க உரிமையாளர்களுக்கு உற்சாகத்தைத் தந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்