மீண்டும் அயர்ன் மேனைக் கொண்டு வாருங்கள்: விளம்பரப் பலகை வைத்து ரசிகர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

டோனி ஸ்டார்க் / அயர்ன் மேன் கதாபாத்திரத்தை மீண்டும் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டு ரசிகர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விளம்பரப் பலகை வைத்துள்ளனர்.

2008ஆம் ஆண்டு வெளியான ‘அயர்ன் மேன்’ படத்தின் மூலம் தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, 2019ஆம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' திரைப்படத்துடன் முடிந்தது. இதில் டோனி ஸ்டார்க் என்கிற அயர்ன் மேன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ராபர்ட் டவுனி ஜூனியர். இவருக்கு, இந்தக் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவரது அலட்சியமான உடல் மொழியும், கிண்டல் நிறைந்த பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவை.

'அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்' படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரம் இறந்துவிடுவது போலக் கதை அமைக்கப்பட்டிருந்தது. பல ரசிகர்கள் இதை ஒரு சரியான, திருப்திகரமான முடிவாகக் கருதினாலும், இன்னும் ஒரு தரப்பு மீண்டும் அயர்ன் மேன் தோன்றுவாரா என்று தொடர்ந்து தயாரிப்புத் தரப்பான டிஸ்னி மற்றும் மார்வல் ஸ்டுடியோஸைக் கேட்டு வருகிறது. டோனி ஸ்டார்க் கதாபாத்திரத்தை மீண்டும் மார்வல் திரைப்படங்களில் கொண்டுவர வேண்டும் என்று சிலர் கேட்க ஆரம்பித்தனர்.

தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் ரசிகர்கள், இன்னும் ஒரு படி மேலே சென்று, விளம்பரப் பலகை ஒன்றை அமைத்துள்ளனர். இதில், "எங்கள் அன்பார்ந்த நாயகன், தயவுசெய்து டோனி ஸ்டார்க்கை மீண்டும் கொண்டு வாருங்கள்" என்று எழுதியுள்ளனர். இதன் கீழ் #BringBackTonyStarkToLife என்கிற ஹேஷ்டேகையும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், ரசிகர்கள் எப்படிக் கேட்டாலும் மீண்டும் டோனி ஸ்டார்க் / அயர்ன் மேன் கதாபாத்திரத்தைத் திரைக்குக் கொண்டு வரும் யோசனை இப்போதைக்கு தயாரிப்புத் தரப்புக்கு இல்லை. மேலும், அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியரும், தனக்குப் படைப்பாற்றல் ரீதியில் மிகவும் திருப்திகரமான பாத்திரமாக இது அமைந்தது என்றும், முடிவு என்பது பயணத்தின் ஒரு அங்கம் என்றும் தான் உணர்ந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

ஆனால், ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலாக, அடுத்து வரவிருக்கும் 'ப்ளாக் விடோ' திரைப்படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் மீண்டும் ஒரு முறை அயர்ன் மேனாகத் தோன்றவுள்ளார். கடந்த காலத்தில் நடக்கும் கதை என்பதால் கவுரவத் தோற்றத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்