ஓடிடியில் வெளியாகிறது துக்ளக் தர்பார்

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'துக்ளக் தர்பார்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகரின் பல படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான். அவர் நாயகனாக நடித்துள்ள 'மாமனிதன்', 'லாபம்', 'கடைசி விவசாயி', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'துக்ளக் தர்பார்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.

தற்போது மீண்டும் கரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், பல தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'துக்ளக் தர்பார்' படமும் ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனம் நல்ல விலை கொடுக்க முன்வந்ததைத் தொடர்ந்து, 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவது உறுதியாகியுள்ளது. 'மாஸ்டர்' படத்தை விநியோகம் செய்த லலித்குமார்தான் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கான வசனத்தை இயக்குநர் பாலாஜி தரணிதரன் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

மேலும்