நடிகை மனிஷா யாதவுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள் உள்லிட்ட பலரும் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
'வழக்கு எண் 18/9', 'ஆதலால் காதல் செய்வீர்', 'ஒரு குப்பைக் கதை' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த நடிகை மனிஷா யாதவ் தனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
”கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கிறேன். ஆனால் உடனடியாக தேறிவிடுவேன் என்று நம்பிக்கையாக இருக்கிறேன். இப்போதைக்கு மோசமாக எதுவும் இல்லை. கொஞ்சம் மூச்சுத்திணறல் மட்டும் அவ்வப்போது உள்ளது. ஆனால், இந்த கரோனாவை மொத்தமாகத் தாண்டி வருவதே சிறந்தது. எனவே அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, முகக்கவசம் அணிந்து இருங்கள்” என்று மனிஷா யாதவ் ட்வீட் செய்துள்ளார்.
» இந்த ஆண்டும் தொகுப்பாளரின்றி ஆஸ்கர் விழா: புதிய விதிமுறைகளுடன் விரிவான ஏற்பாடுகள்
» விஜய் தேவரகொண்டா -சுகுமார் திரைப்படம் கைவிடப்படுகிறதா?- தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
2017ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரை மனிஷா காதல் திருமணம் செய்து கொண்டார்.
முக்கிய செய்திகள்
சினிமா
6 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago