இதுவரை வெளியான தனுஷ் திரைப்படங்களில் அதிக வசூல் என்கிற சாதனையை 'கர்ணன்' திரைப்படம் நிகழ்த்தியுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்பால் வசூல் ரீதியாக எப்படியிருக்குமோ என்று படக்குழுவினருக்கு லேசான பயம் இருந்தது.
ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளால் பெரிய பாதிப்பின்றி 'கர்ணன்' திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று வருகிறது. ஏற்கெனவே முதல் நாளில் ரூ.10 கோடி வசூலைப் பெற்று, தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியது.
» சர்ச்சைக்குரிய பாடல் வரிகள் நீக்கம்: கர்ணன் படத்துக்கு எதிரான மனுக்கள் முடித்து வைப்பு
» மாரி செல்வராஜை வீடு தேடிச் சென்று பாராட்டிய நடிகர் விக்ரம்
இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான 'அசுரன்' தான் இதுவரை தமிழகத்தில் தனுஷ் படத்துக்குக் கிடைத்த அதிகபட்ச வசூல் என்கிற சாதனையைப் பெற்றிருந்தது. தற்போது 'கர்ணன்' வசூல் அசுரனை முந்தியுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டபின், 'மாஸ்டர்', 'சுல்தான்', 'கர்ணன்' ஆகிய படங்கள் மட்டுமே பெரிய வெற்றி பெற்றுள்ளதாகத் திரையங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது. 100 சதவீத இருக்கைக்கு அனுமதி இருந்திருந்தால் ’கர்ணன்’ இன்னும் பெரிய வசூலைப் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது நெட்ஃபிளிக்ஸின் பிரம்மாண்ட ஹாலிவுட் தயாரிப்பான ’தி க்ரே மேன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’, ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
29 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago