விஜய் ஆண்டனி நடித்துள்ள 'கோடியில் ஒருவன்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இன்று (ஏப்ரல் 16) மாலை 'கோடியில் ஒருவன்' படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனப் படக்குழு தெரிவித்தது. அதன்படி மே 14-ம் தேதி ரம்ஜான் விடுமுறையைக் கணக்கில் கொண்டு வெளியாகும் என்று 'கோடியில் ஒருவன்' படக்குழு அறிவித்துள்ளது. செந்தூர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இன்ஃபினிட்டி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்.எஸ்.உதயகுமார், எடிட்டராக விஜய் ஆண்டனி, கலை இயக்குநராக உதயகுமார் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
» விவேக் மாரடைப்புக்குத் தடுப்பூசி காரணமா? மோசமான நிலையில் உள்ளார்: மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago