விக்ரம் பிரபுவின் 'பகையே காத்திரு' - பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

By செய்திப்பிரிவு

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகும் 'பகையே காத்திரு' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

'புலிக்குத்தி பாண்டி' படத்தைத் தொடர்ந்து 'டாணாக்காரன்', 'பொன்னியின் செல்வன்', 'பாயும் ஒளி நீ எனக்கு' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு. இதில் 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. இதர படங்களின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது விக்ரம் பிரபுவின் புதிய படம், பூஜை, படப்பிடிப்புடன் தொடங்கப்பட்டுள்ளது. 'பகையே காத்திரு' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்மிருதி வெங்கட், வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் உள்ளிட்ட பலர் விக்ரம் பிரபுவுடன் நடிக்கவுள்ளனர்.

கந்தன் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஏ.மணிவேல் இயக்குகிறார். முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு கொச்சின், ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது. 'பகையே காத்திரு' படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 16) காட்டுப்பாக்கத்தில் நடைபெற்றது. மே மாத இறுதிவரை முதற்கட்டப் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக எஸ்.செல்வகுமார், இசையமைப்பாளராக சாம் சி.எஸ், கலை இயக்குநராக சிவா யாதவ், எடிட்டராக ராஜா முஹமது, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்