மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண குணமடைய பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். தனது நகைச்சுவையில் சமூக அக்கறை கருத்துகளைக் கலந்து மக்களிடையே கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்துல் கலாம் மீது தீவிர பற்று கொண்டவர். மரம் நடுவதிலும் ஆர்வம் கொண்டவர்.
இன்று (ஏப்ரல் 16) காலை வீட்டில் குடும்பத்தினர் மத்தியில் பேசிக் கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
» தடுப்பூசியையும் மாரடைப்பையும் இணைத்துப் பேசாதீர்கள்: விவேக் உடல்நிலை விவகாரத்தில் குஷ்பு காட்டம்
திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பை சரிசெய்ய ஆஞ்சியோ சிகிச்சைக்கு முயன்றார்கள். மேலும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அவருக்கு எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் மருத்துவமனை தரப்பிலிருந்து முறையான அறிக்கை வெளியாகவில்லை.
இதனிடையே, விவேக்குடன் பணிபுரிந்த நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் அவர் பூரண குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர். சில முன்னணி நடிகர்கள் உடனடியாக அவருடைய குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர்.
விவேக் பூரண நலம்பெறப் பிரபலங்கள் வெளியிட்டுள்ள வாழ்த்துகளின் தொகுப்பு:
Get well soon @Actor_Vivek saar!! All our prayers with you
— venkat prabhu (@vp_offl) April 16, 2021
Wishing a Speedy Recovery to everyone 's favourite @Actor_Vivek !! #Vivek pic.twitter.com/632uJZMHvM
— Think Music (@thinkmusicindia) April 16, 2021
Team Studio Green extends its prayers and wishes for the speedy recovery of Actor Vivek sir. pic.twitter.com/8geRxsH0C8
— Studio Green (@StudioGreen2) April 16, 2021
Prayers and good wishes sent to Vivek sir from all of us. Get well soon sir @actornasser @AbiHassan_ #Luthfudeen
— Kameela (@nasser_kameela) April 16, 2021
It is shocking to hear that my friend Vivek has been hospitalized. I wish him a speedy recovery #GetWellSoon
— R Sarath Kumar (@realsarathkumar) April 16, 2021
Praying for a speedy recovery for @Actor_Vivek sir!!
— ArunVijay (@arunvijayno1) April 16, 2021
Wishing @Actor_Vivek sir a speedy recovery. Very shocking to know https://t.co/rJBioxqOWt
— Dr. Dhananjayan BOFTA (@Dhananjayang) April 16, 2021
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago