காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரஜினி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ஜெயராம். ‘தெனாலி’, ‘பஞ்சதந்திரம்’ உள்ளிட்ட படங்களில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பாராட்டப்பட்டவை. இவருடைய மகன் காளிதாஸ் ஜெயராம். 2016ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘மீன்குழம்பும் மண்பானையும்’ படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ‘பூமரம்’, ‘ஹாப்பி சர்தார்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.
கடந்த ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘பாவக்கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் இடம்பெற்றிருந்த ‘தங்கம்’ என்ற குறும்படத்தில் இவர் ஏற்று நடித்த சத்தார் என்ற திருநங்கை கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலரும் காளிதாஸ் ஜெயராமுக்குப் பாராட்டு தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகவுள்ள ஒரு படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு மலையாளத்தில் ‘ரஜினி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழில் இன்னும் தலைப்பு முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தில் காளிதாஸ், ரஜினி ரசிகராக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. வினில் ஸ்காரியா வர்கீஸ் இயக்கவுள்ள இப்படத்தில் நமீதா ப்ரமோத், சைஜு குரூப், அஸ்வின் குமார், கருணாகரன், ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago