அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படத்துக்கு 'பார்டர்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.
'குற்றம் 23' படத்துக்குப் பின் அருண் விஜய் - அறிவழகன் மீண்டும் இணைந்து பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்றது. இந்தப் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே, நேற்று (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்துக்கு 'பார்டர்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.
இந்தத் தலைப்பு அறிமுகத்தை சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வித்தியாசமான முறையில் நடத்தியது படக்குழு. இதில் படக்குழுவினருடன் பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
இதில் ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் அருண் விஜய்யுடன் நடித்துள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக ராஜசேகர், இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். மே மாதம் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
5 mins ago
சினிமா
56 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago