மஹத் நடிக்கும் காதல் கண்டிஷன்ஸ் அப்ளை

By செய்திப்பிரிவு

மஹத் நடித்து வரும் படத்துக்கு 'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

'ஜருகண்டி', 'லாக்கப்' ஆகிய படங்களைத் தொடர்ந்து புதிய படமொன்றைத் தயாரித்து வருகிறார் நிதின் சத்யா. ஆர்.அரவிந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் மஹத், சனா மகுல், டிடி, மகேஸ்வரி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னையிலேயே முழுப் படப்பிடிப்பையும் நடத்தியுள்ளது படக்குழு. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்தப் படத்துக்கு 'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் தலைப்பை சிலம்பரசன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர். 'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை' படக்குழுவினர் சிலம்பரசனை நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர். அப்போது படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சிலம்பரசன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்