போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்துக்கு 'அகண்டா' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. டீஸரும் வெளியாகியுள்ளது.
‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக போயபதி சீனு இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். முந்தைய இரண்டு படங்களும் தெலுங்கில் பெற்ற மாபெரும் வெற்றியால் இப்படத்துக்கும் பாலகிருஷ்ணா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு ஜூன் 10ஆம் தேதி நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளன்று #பிபி3 என்ற அழைக்கப்படும் இப்படத்துக்கான ஒரு சிறிய டீஸரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டீஸர் இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இப்படத்துக்கு ‘அகண்டா’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீஸர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
» நடிகர் செந்திலுக்கு கரோனா தொற்று: குடும்பத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதி
» இதுவரை நடித்ததில் கடினமான கதாபாத்திரம்: ‘ஜோஜி’ குறித்து ஃபகத் பாசில் பகிர்வு
இது பாலகிருஷ்ணா நடிக்கும் 106-வது படமாகும். இப்படத்தை மிர்யாலா ரவீந்தர் ரெட்டியின் துவாராகா கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago