'கர்ணன்' படம் பார்த்துவிட்டு திட்டாதீங்கப்பா என்று நட்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் தனுஷுக்கு எதிர்மறை கதாபாத்திரத்தில் நட்ராஜ் நடித்திருந்தார். அவருடைய நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
அதே வேளையில், தனுஷ் ரசிகர்கள் அவரைத் திட்டியும் வருகிறார்கள். தனக்குத் தொலைபேசி வாயிலாகவும் திட்டிவருவது குறித்து நட்ராஜ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல.. திட்டாதீங்கப்பா.. முடியலப்பா.. அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி."
இவ்வாறு நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
22 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago