அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கரோனா அச்சுறுத்தல் தொடங்கிய சமயத்தில், ரஷ்யாவில் சில முக்கியமான காட்சிகளை 'கோப்ரா' படக்குழு படமாக்கி வந்தது. அப்போது ரஷ்யாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட இருந்ததால், படப்பிடிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா திரும்பியது படக்குழு. பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ரஷ்யா சென்று இறுதிகட்ட படப்பிடிப்பை படக்குழு முடித்தது. விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ‘கோப்ரா’ படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகவுள்ளதாகவும், அதற்காக பெரிய ஓடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இந்த தகவலை ‘கோப்ரா’ படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்க்ரீன் நிறுவனம் முற்றிலுமாக மறுத்துள்ளது. அந்த தகவல் வெளியான ட்வீட்டை தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிருந்து செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தினர் அது முற்றிலும் போலியான தகவல் என்று குறிப்பிட்டுள்ளனர். சில மணி நேரத்தில் அந்த போலித் தகவல் குறித்த பதிவும் ட்விட்டரில் இருந்து நீக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago